Clicky

பிறப்பு 13 APR 1929
இறப்பு 04 FEB 2020
Late சபாரத்தினம் சண்முகநாதன்
இளைப்பாறிய அதிபர்- Reform School அச்சுவேலி
வயது 90
Late சபாரத்தினம் சண்முகநாதன் 1929 - 2020 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Florida Tamil Friends 08 FEB 2020 United States

அன்பான அமரர் திரு ஷண்முகநாதனிற்கு எமது ஆத்மார்த்த பிரியாவிடை மாநிலத்தின் மாமனிதனாய் குலத்தின் குன்றாய் புளோரிடா தமிழ்மன்றத்தின் மாறாத பற்றுடையவராய் வாழ்ந்த இவ்வுலகை பற்றறுத்து விட்டு பறந்ததேனோ பரலோகம் பெற்றோரின் வழிதேடிப் புகுந்துவிடடீர் புதுஉலகம் சிரித்த முகமும் சித்தனை திறனும் தணியாத தமிழ் பற்றும் சமய நெறியும் சீற்றமே கொள்ளாத மாசற்ற உள்ளத்தோடு மறைத்ததேனோ எம்மைவிட்டு - மறக்கமுடியவில்லை அன்பு சொரிந்து அனைவரையும் அரவணைத்து வன்சொல் அறியா வள்ளலாய் வாழ்ந்து நிறைவாழ்வு வாழ்ந்த நிர்மல் ஐயா நீங்கள் குறையாய் எதையும் குறியாய் பார்த்தறியோம் கடல்கடந்து நீங்கள் தொலைதூரம் சென்றதனால் கடைசி நிமிடத்தை காணமுடியவில்லை கலங்காத உங்கள் கருணை கண்களை கறையென்று எதுவும் கனவிலும் கண்டறியீர் நிறைபோன்ற வாழ்வை நண்ணி மகிழ்த்தீரே பாசமுள்ள அன்பு மனைவி பண்பான குழந்தைகள் பரிதவிக்க பார்த்திருக்க மண்ணவரும் விண்ணவரும் மனமுவந்தது வாழ்த்திநிற்க வானத்து நட்ஷத்திரமாய் வாழச்சென்றதென்ன காலத்தின் கடடளைத்தான் அன்புள்ளம் கொண்டவரே ஆனத்தமானவரே அழைத்த தெய்வம் உங்கள் ஆத்மாவை தேற்றட்டும் அன்பான மனைவிக்கு அமைதியை அழிக்கட்டும் வாழவைத்த தெய்வம் நீங்கள் மேலிருந்து வாழ்த்திடுவீர் ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி. ஓம் ஷாந்தி இலங்கை தமிழ் மன்றம்

Notices

மரண அறிவித்தல் Tue, 04 Feb, 2020
நன்றி நவிலல் Tue, 03 Mar, 2020