

யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கு மூச்சம்புலவைப் பிறப்பிடமாகவும், புலோலி வடகிழக்கு நீண்டியம்பற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் சிதம்பரநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஸப்தமி திதி: 04-08-2022
எம் அன்புத்தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து இன்று
ஆண்டொன்று ஆனது அப்பா.
எத்தனை இன்னல்கள் வந்தாலும்
அப்பா நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே உங்கள் பிரிவு எம்முள்ளே.
அன்போடு பண்பையும் பாசத்தையும்
எம்முள் விதைத்து
எமை விட்டு
இறைவனடி சென்றீர்களே
இன்னும்
வாழ்ந்திருக்கலாம் அப்பா
நீங்கள் எங்களோடு.
எம்முயிர் தந்தையே
எங்கள் உள்ளங்களின் ஒளிவிளக்கே
சூரியனைக்கண்டு மலரும் தாமரையாய்
உங்கள் அன்புமுகம் பாராமோ அப்பா.
இறையருளோடும் உங்கள் ஆசிகளோடும்
எங்கள் வாழ்வின் கனவுகளும்
வளர்ச்சிகளும் நிஜமாகும்..
எம்மோடு நீங்கள் என்றென்றும்
கூடவே இருக்கின்றீர்கள் என்று
இப்பூவுலகில் உளம் தளராது பயணிக்கின்றோம்.
Our condolence