
யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு அளுத்மாவத்தையை வதிவிடமாகவும், நீர்கொழும்பு கொச்சிக்கடையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சபாபதி குணரட்ணம் அவர்கள் 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நீர்கொழும்பில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி கற்பகம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஜேமிஸ் மகி நோனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜி.ஜி.சோமாவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரியதர்சினி(இலங்கை), அருட்குமரன்(குமார்-பிரான்ஸ்), காஞ்சனா(லண்டன்), சித்திரா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வனிதராணி(வனிதா-பிரான்ஸ்), அன்பழகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராசம்மா(மலேசியா), செல்லம்மா(இலங்கை), பவளம்(பிரான்ஸ்), மங்களம்(இலங்கை), நேசமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜி.ஜி.வைலட், காலஞ்சென்ற றூபசிங்க(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜித், அனுஷியா(பபு), சரணியா(பிரான்ஸ்), ரேணுகா, திஷான்(லண்டன்), சிறிதரி ரதன்(கனடா), சமீரா, ஹரிஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு W.S.Fernando & Son இல. 136, Chilaw Road, Negombo என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு பொதுமயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.