யாழ். தும்பளையைப் பிறப்பிடமாகவும், ஆத்தியடியை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 25-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆனந்த நடராஜா மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜந்தினி, சுஜந்தன், கஜந்தன், அஜந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரதாஸ், சிவாஜினி, சுதர்சினி, நாமலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தேவநாயகி, ஜெயலக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஹீதரன், நித்தியலக்ஷ்மி, சியாமளா, சுகுமார், ஜெயகுமார், பிரமிளா ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்,
காலஞ்சென்றவர்களான தங்கேஸ்வரி, சிதம்பரநடராஜா மற்றும் ஞானேஸ்வரி, விஜயலக்ஷ்மி, சிவகுமாரன், காலஞ்சென்ற மகாலக்ஷ்மி, சங்கரநாதன், கலாநிதி, நந்தகுமார், கனகசபை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கிருஷாந், தயானி கிருஷாந், நிஷாந், சுஜீவினி, சுஜீவன், சஜீவன், விதீஷன், தஷ்வின், அஜானா, வினிஷா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை சுப்பர்மடம் இந்து மைதானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.