யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கேப்டன் மலரவன் (சபாம்பிள்ளை சுரேந்திரராஜ்) அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மாவின் பிள்ளையாய்
பாசமிகு சகோதரனாய்
ஆயிரம் கனவுகளுடன் வளர்ந்தாய்!
அதிகம் பேசாவிட்டாலும்
அழகாய்ப் பேசுவாய்!
தனக்கு ஒன்றுமில்லை என்றாலும்
மற்றவர்களுக்கு கொடுப்பாய்!
துடிப்பான சிறுவனாய்
திறமையான மாணவனாய்
மிடுக்காக வளர்ந்தாய்!
எல்லோருக்கும் வாழ்க்கை
இலகுவாய் அமைவதில்லை!
அதில் நீயும் விதிவிலக்கில்லை!
தாயின் கனவை மறந்து!
தாயகக் கனவுடன் புறப்பட்டாய்!
திரும்பி வருவாயென காத்திருந்தோம்
ஆம் வந்தாய் அன்று
அதுதான் கடைசி நாளென்று
கனவிலும் நினைக்கவில்லை
புலம்பினோம் கதறினோம்
கால் நூற்றாண்டாகியும் நிற்கவில்லை!
வாழ்ந்த காலம் சிறிதென்றாலும்
வரலாறு உம்மை மறக்காது!
சிந்தும் குருதிக்கு சிறப்பளித்து செங்களம் பாய்ந்தவரை
மறவாதே தமிழினமே
இவ் அரசியல் சதுரங்கத்தில் சிக்கி மரணித்த அனைவரினதும்
(போராளிகள், பொதுமக்கள், இராணுவத்தினர்)
ஆத்மாசாந்தியடைய பிரார்த்திக்கும் குடும்பத்தினர்...