
திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பிரபல பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர்
வயது 74
பிறப்பு
: 04 JUN 1946
-
இறப்பு
: 25 SEP 2020
பிறந்த இடம்
நெல்லூர், India
வாழ்ந்த இடம்
சென்னை, India
-
04 JUN 1946 - 25 SEP 2020 (74 age)
-
பிறந்த இடம் : நெல்லூர், India
-
வாழ்ந்த இடம் : சென்னை, India
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தென்றல் தெவிட்டும் இசை தேமதுரத்தமிழோசை
தென்னாடு தந்த தெலுங்கு மைந்தன்
தென்றலாய் வலம் வந்தான் தேனிசையில்
தேனிசையில் என்றும் பாலனாய்ப் பவனிவந்தான்;
இன்னிசையிலே புதுமைகள் பல செய்தான்
இன்பமுடன் இனிய சங்கதிகள் கூட்டி
இன்பப் பாடல்கள் பலவும் பாடி
இன்புற வைத்தான் இன்பம் பல கூட்டி
காலங்கள் கடந்தாலும் மறந்து விடாது
காதுகள் மறந்தாலும் மறக்கவிடாது
தாளங்கள் பிழைத்தாலும் தவிக்கவிடாது
இராகங்கள் சேர்த்து வைத்தான் மறந்துவிடாது
உன்னிசை கேட்டவன் உலகையும் மறந்தான்
உன்னிசை கேட்டவன் துயரையும் மறந்தான்
உன்னிசை கேட்டவன் தன்னையும் மறந்தான்
உன்னிசை தானே உலகம் என்றிருந்தான்
பல்லாயிரம் பாடல்கள் கேட்டு மகிழ்ந்தாலும்
பல்லாயிரம் கேட்கப் பரிதவிக்கும் மனங்கள் இங்கே
படுக்கையிலிருந்து மீண்டு வருவாய் என்றே
படைத்தவனை வேண்டி ஏங்கிய உள்ளங்களிங்கே
படைத்தவன் முடிவில் மாற்றங்கள் இல்லை
காலம் வந்துவிட்டால் காலனும் தாமதிக்கான்
காலம் கடந்தாலும் உன் பாடலிசையினால்
பாலன் நீ பாலசுப்பிர மணியன்தான்
ஈர்பத்து வயதினிலே இன்னிசையில் ஈடுபட்டு
இவ்வுலக வாழ்வுதனை இசைதனுக்கே அர்ப்பணித்து
நல்லுலகம் போற்றும் இசையின் பாலனாய்
தந்தஇசை போதும் என்று இறைவன் நினைத்தானோ
சென்றுவா சென்றுவா என்றே சொன்னாலும்
எம் மனம் ஆறாத்துயரில் வாடுதிங்கே
ஜனனம் உண்டென்றால் மரணம் உண்டு
என்று அமைதி கொண்டு உன் ஆத்மா சாந்தியடைக.
Write Tribute
Rip sir