
-
04 JUN 1946 - 25 SEP 2020 (74 age)
-
பிறந்த இடம் : நெல்லூர், India
-
வாழ்ந்த இடம் : சென்னை, India

ஆயிரம் நிலவாய் ஒளிர்ந்த எனது இசை வீரர் உயர்திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் எம்மை எல்லாம் விட்டு பிரிந்துவிடுவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்தியா மட்டுமின்றி உலகளாவிய மக்கள் மனதில் பாடும் நிலவாய் பிரகாசித்துக்கொண்டிருக்கும் திரு.எஸ்.பி.பி.அவர்களை கருமேகங்கள் வந்து மூடியதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இது எங்கள் வீடுகளில் ஏற்பட்ட ஒரு இழப்பு போலவே தாக்கத்தை கொடுக்கிறது. நடிப்பிற்கு இமயம் திரு சிவாஜி கணேசன் எப்படியோ, அப்படித்தான் பாட்டுக்கு இமயம், சக்கரவர்த்தி திரு.எஸ்.பி.பி. அவர்கள். அவரது உருவம்தான் எம்மைவிட்டு பிரிந்துள்ளதே தவிர அவரது காந்தக்குரல் எப்போதும் எங்கள் உயிரோடும், உணர்வோடும் சங்கமித்தவறே என்றும் இருக்கும். "எந்தன் மூச்சும் , இந்தப்பாட்டும் அணையா விளக்கே" என்ற அவரது பாடல் போலவே எங்களோடு கலந்து விடடவர் எமது எஸ்.பி.பி. திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை பற்றி எல்லாமும் எல்லாரும் அறிந்ததே. நான் கூறுவது ஒன்று மட்டும் தான் சிறியவர் முதற்க்கொண்டு வயதானவர்கள் வரை எவருடைய அவதூறுகளும் சொல்லப்படாத ஒரு உத்தம மனிதர் திரு.எஸ்.பி.பி.அவர்கள். அவரது நல்லாத்மா இறைவனிடம் சேர்ந்து சாந்தி அடைய நாம் ஆண்டவனை வாங்குவதோடு அவரை இழந்து வாடும் அவரது அனைத்து குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எங்கள் ஆறுதலையும் வேண்டி நிற்கின்றோம். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" -எஸ்.பி.பி. பக்தன்- கண்ணன் பிரான்ஸ்
Rip sir