
தென்றல் தெவிட்டும் தேமதுரத் தமிழோசை தென்னாடு தந்த தெலுங்கு மைந்தன் தென்றலாய் வலம் வந்தான் தேனிசையில் தென்தமிழ் பாலனாய்ப் பவனி வந்தான்; இன்னிசையிலே பல புதுமைகள் செய்தான் இன்பமுடன் இனிய சங்கதிகள் கூட்டி இன்பப் பாடல்கள் பலவும் பாடி இன்புற வைத்தான் இன்பம் பல கூட்டி காலங்கள் கடந்தாலும் மறந்து விடாது காதுகள் மறந்தாலும் மறக்க விடாது தாளங்கள் பிழைத்தாலும் தவிக்க விடாது இராகங்கள் வைத்தான் மறந்து விடாது உன்னிசை கேட்டவன் உலகையும் மறந்தான் உன்னிசை கேட்டவன் துயரையும் மறந்தான் உன்னிசை கேட்டவன் தன்னையும் மறந்தான் உன்னிசை தானே உலகம் என்றிருந்தான் பல்லாயிரம் பாடல்கள் கேட்டு மகிழ்ந்தாலும் பண்ணாயிரம் கேட்கப் பரிதவிக்கும் மனங்கள் இங்கே படுக்கையிலிருந்து மீண்டு வருவாய் என்றே படைத்தவனை வேண்டி ஏங்கிய உள்ளங்களிங்கே படைத்தவன் முடிவில் மாற்றங்கள் இல்லை காலம் வந்துவிட்டால் காலனும் தாமதிக்கான் காலம் கடந்தாலும் உன் பாடலிசையினால் பாலன் நீ பாலசுப்பிர மணியன்தான் ஈர்பத்து வயதினிலே இன்னிசையில் ஈடுபட்டு இவ்வுலக வாழ்வுதனை இசைதனுக்கே அர்ப்பணித்து நல்லுலகம் போற்றும் இசையின் பாலனாய் தந்தஇசை போதுமென்று இறைவன் நினைத்தானோ ஒருநாடா இருநாடா உன் ஒலி நாடா ஒலிக்காத வீடு இன்று இல்லை ஒலிக்கும் ஒலிக்கும் இன்னும் ஒலிக்கும் ஒலி நடாவால் நித்தமும் நிலைத்துருப்பாய் சென்றுவா சென்றுவா என்றே சொன்னாலும் எம் மனம் ஆறாத்துயரில் வாடுதிங்கே ஜனனம் உண்டென்றால் மரணம் உண்டு என்று அமைதி கொண்டு உன் ஆத்மா சாந்தியடைக.

Rip sir