அமரர் றோஸ் றெபேக்கா இம்மானுவேல்
பிறப்பு : 17 நவம்பர் 1936 இறப்பு : 1 பெப்ரவரி 2015
யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கோவில் வீதியை வதிவிடமாகவும், வவுனியா சமயபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றோஸ் றெபேக்கா இம்மானுவேல் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமரர் அன்ரனி சிறிகாந்தி
பிறப்பு : 05 டிசம்பர் 1957 இறப்பு : 1 ஜனவரி 2024
யாழ். கோவில் வீதியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரனி சிறிகாந்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
”சீவியத்தில் எம்மை நேசித்தவர்களே
மரணத்திலும் எம்மை மறவாதீர்கள்”
எங்கள் அம்மா அக்காவே உங்களைப்
பிரிந்து
பல ஆண்டுகள் கடந்ததுவே!
அருள் விளக்கே நீங்கள் அணைந்தது
சில நாழிகை போலன்றோ!
சிந்தனையில்
தோன்றுதே அம்மா அக்கா..!
நீங்கள் எமை விட்டுப் பிரிந்தாலும்
நித்தமும் உங்கள் நினைவு நெஞ்சில்
நிழலாடுது
எம் சொப்பணத்தில்
நீங்கள் சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றீர்கள்..!
அரும்பசி வந்தபோது அம்மா அக்கா
உங்கள் நினைப்பு
ஆற்றா நோய்க்கும்
நீயே தானேயம்மா மருந்து
ஆயிரம்
உறவுகள் பூமியில் இருந்தும் என்ன
அம்மா உனக்கு ஒப்பாகுமோ ஓர் உறவு..!
மனதோடு எமை சுமந்து
பிரிவோடு துயர் தந்து
ஆண்டுகள் பல ஆனாலும்
ஆறாது
உங்கள் இழப்பின் துயர்
எம் நெஞ்சை
விட்டு நீங்காது உம் இருவர் நினைவு..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
அம்மா..! அக்கா..!
அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக 01.02.2025 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு அருள் ஆச்சிரமத்தில் ஒப்புக் கொடுக்கப்படும் இரங்கல் திருப்பலியில் கலந்துகொண்டு செபிக்குமாறும் அதனை தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் மதிய போசன விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.
விட்டு முகவரி:
இல 02 கோவில் வீதி
யாழ்ப்பாணம்.