5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ரூத் சுகுணாவதி கிறிஸ்தோப்பர்
இணுவில் வைத்தியசாலை ஓய்வுபெற்ற தாதி
வயது 81
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுன்னாலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heppenheim ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரூத் சுகுணாவதி கிறிஸ்தோப்பர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேசம் மரிக்கவில்லை நினைவுகள் கலையவில்லை!
எம் அழியாச் சொத்து அலைமோதிப் போனதனால்
உற்ற துணையிழந்து உருகி மடிகின்றோம்!
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
நேசத்துக்கு என எங்களைப் பெற்றெடுத்து
ஆளாக்கி பேணிக்காத்து பெருவாழ்வு எமக்களித்த எம் தாயே..!
நின் திருமுகம் கண்டு ஆண்டு ஐந்து ஆனதோ !
உம் நினைவு எம்மை வாட்டுதம்மா
நீங்காத உங்கள் நினைவில்
நித்தமும் நாம் வாழ்கின்றோம்
என்றென்றும் எழிலோடு எம் நெஞ்சிலெ நீ வாழ்வாய்!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்