லண்டன் Harrow ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரோணேஸ் அஜே அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் கடந்துபோகும் ஆனால்
கண்மணியே உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும்- எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு மகனே !
ஆண்டுகள் நூறாயினும் உன் நினைவுகள்
எம்மை விட்டு மறையாதையா!
நேற்றுவரை எம்மோடு இருந்த அஜே இன்று
காற்றோடு கலந்து கனவாகிப்போய் ஆண்டு பத்து
வந்தும் ஆறமுடியவில்லை- அஜே !
அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகிய மகனே அஜே
உந்தன் பிரிவால் இன்றும் நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!
உன்னழகு வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதப்பா!
விழிகள் சொரிகிறது
நிரப்ப முடியா வெற்றிடத்தை உருவாக்கி
எம்மை நிலைதடுமாற வைத்து
எங்கு சென்றாய்?
உந்தன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.