
இந்தியா மதுரையைப் பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட ரோபோ சங்கர் அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
ரோபோ சங்கர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டவர். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.
சங்கர் கிராமத்து நிகழ்ச்சிகளில் ரோபோ நடனம் ஆடி ரோபோ சங்கர் என்ற பெயரை பெற்றார். ரௌத்திரம் (2011) படத்தில் கோகுல் ஒரு கதாபாத்திரத்தை வழங்கியபோது இவர் ஒரு மிமிக்ரி கலைஞராக இருந்தார்; இருப்பினும், இவரது காட்சிகள் படத்திலிருந்து திருத்தப்பட்டன. கோகுல் மீண்டும் இவரை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013) படத்தில் நடிக்க வைத்தார். இப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. யாருடா மகேஷ், கப்பல் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்த சங்கரை, பாலாஜி மோகன், வாயை மூடி பேசவும் (2014) படத்தில் நடிக்க வைத்தார். இவரது நடிப்பு விமர்சகர்களால் "உச்சம்" என்று விவரிக்கப்பட்டது. இதன் பின்னர் டூரிங் டாக்கீஸில் (2015) எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் மாரி (2015)-இல் தனுசுடன் நடித்தார். இப்படத்தில் சங்கரின் நடிப்பு விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது. இவர் "சிறப்புக் குறிப்புக்குத் தகுதியானவர்", "தனது தனித்துவமான நகைச்சுவை, உடல் மொழி ஆகியவற்றால் அனைவரையும் கவர்ந்தார்.
கலைமாமணி ரோபோ சங்கர் 2025 செப்டம்பர் 18 அன்று சென்னையில் உடல்நலக் குறைவினால் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.
தனது சிறந்த நடிப்பினால் மக்கள் மனங்களை வென்ற கலைமாமணி ரோபோ சங்கர் அவர்களின் மறைவிற்கு RIPBOOK, சினி உலகம் இணையதளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர் நலம் விரும்பிகள் அனைவரின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது.