கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ரிக்ஷிகா ஜெயதீபன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
மகளே ரிக்ஷிகா!
ஐ இரண்டு வருடங்கள்
கழிந்தன உன் நினைவுகளில்
கண்மணியே!
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்தி
மறைந்து விட்ட மாயம்
என்ன?
மகளே!
ஐ இரண்டு மாதங்கள்
உன்னை சுமந்த நான்
இன்று உன் நினைவுகளை
மட்டும் சுமக்கின்றேன் கனத்த
இதயத்தோடு !
எத்தனை காலங்கள் கடந்தாலும்
என் கனவுகள் உன்னோடு
பொண்மணியே!
தோளில் சுமந்தவன் இன்று
தோற்றுப்-போய் நிற்கின்றேன்
உன்னை காலனுக்கு இரையாக்கிவிட்டு
கண்ணீரோடு!
வழிகின்ற கண்ணீர் கூட
என் வலிகளை கனமாக்கி
செல்கின்றது உன் அழியா
நினைவுகளோடு!
நீங்கா நினைவுகளில் நித்தம்
நீதானடி எம் செல்ல
மகளே!
தங்கையே!
கூடி விளையாடிய
எம் தங்கையே!
கடவுளுக்கு தெரியுமா
நீ எங்கள் உயிர்
என்று!
நினைவுகளை மட்டும் சுமக்கவிட்டு
விண்ணுலகம் உன்னை
அவசரமாய் அழைத்ததேனோ!
அக்கா!
இவ்வுலகம் காணும் முன்
நீ கடவுளின் பிள்ளை
அக்கா!
நான் பிறந்த பின்
நீயோ வெகு தொலைவில்
அக்கா!
வருடங்கள் எத்தனை எத்தனை
கோடி கடந்தாலும் எம் இதயத்தில்
நீங்காத இடத்தில் நீயே
ரிக்ஷிகா!
என்றும் உன் பிரிவால் துயருறும்
அம்மா, அப்பா, அண்ணன்கள், தம்பி,
உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்...