"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்"
(யோவான் 11:25)
யாழ். இளவாலை பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட கபிரியேற்பிள்ளை இம்மானுவேல் மேரிஜோசப் அவர்கள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கபிரியேற்பிள்ளை, பேர்னடேற் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற லூட்ஸ்(இராசாத்தி), ஜெயசிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற விஜயரட்ணம், அருள்லீலிநாயகி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயா(கனடா), ராஜகுலேந்திரன்(லண்டன்), விஜயகுமாரி(கனடா), காலஞ்சென்ற விஜயராணி, விஜயதேவி(ஜேர்மனி), விஜயசீலன்(கொழும்பு), விஜயமோகன்(கொழும்பு), விஜயசீலி(கனடா), காலஞ்சென்ற விஜயமோகினி, விஜயராஜி(கனடா), விஜயதன் -ஜோய்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஸ்மைலி(கனடா), கோபி(கனடா), பேர்சி(கனடா) ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 22-02-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 03:30 மணிக்கு யாழ் மரியன்னை பேராலயத்தில் யாழ் ஆயர் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Even though I wasn’t able to live in your presence for too long, I still feel your absence. From all the stories I’ve heard, I can tell how much you impacted everyone’s life in a positive way. I’m...