யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், கிளிநொச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினராசா தம்பிராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் சிவபதப்பேறு கிரியைகள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:30 க்கு Baba Banquet Halls, 3300 McNicoll Ave, Scarborough, ON M1V 5J6 இல் நடைபெற இருப்பதால் அத்தருணம் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அவரது நினைவஞ்சலியிலும், அவருக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.