

யாழ். ராஜேந்திரா வீதியைப் பிறப்பிடமாகவும், மத்தியூஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராயப்பு யோசப் துரைரெட்ணம் அவர்கள் 03-10-2019 வியாழக்கிழமை அன்று காலமாகி விட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நயாத்துரை, மரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராணி அவர்களின் அன்புக் கணவரும்,
வெனி, ஜெனி(சுவிஸ்), லக்ஸ்சி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றொபேட், அருள்நாயகம்(சுவிஸ்), சதீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பெர்னபேத்து, ராசராணி, ராசாத்தி, மேரியம்மா, வவா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஐயாயோசப், யோகராணி, யோகராசா(கனடா), தர்மசோதி, தேவராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற அன்னறொசலின், அருளானந்தம்(ஆசிரியர்), சறோ(கனடா), ஜெயசீலன்(யாழ் மாநகர சபை உறுப்பினர்), சறோ(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலு, சிவப்பிரகாசம், அழகுரெட்ணம், தங்கராசா, தேவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டினூஜன், தயானி, லிபினா, கஷனி, பசோன், அஸ்லிதா(சுவிஸ்), அஜந்(சுவிஸ்), யனுஸ்காந், லஸ்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித மரியன்னை பேராலயத்தில் ஆராதனை செய்யபட்டு அதனை தொடர்ந்து கொஞ்சிமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.