Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 JAN 1963
இறப்பு 23 JAN 2025
திருமதி ரவிதாஸ் இந்திராணி 1963 - 2025 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி, கிளிநொச்சி வட்டக்கச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரவிதாஸ் இந்திராணி அவர்கள் 23-01-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவிதாஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,

லோகிதாஸ்(பிரித்தானியா), கஜந்(பிரித்தானியா), லக்‌ஷிகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

உஷா, றொமி, நிரோஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆருசி அவர்களின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற புஸ்பராணி, தவமணி தேவி(பிரான்ஸ்), மோகனதாஸ்(பிரான்ஸ்), நீலாம்பிகை, செல்வராணி, பாலச்சந்திரன்(பிரான்ஸ்), அருள்யோகராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோகேஸ்வரி, காலஞ்சென்ற இராஜசிங்கம், ஸ்ரீராகினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.   

அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இல.159, சில்வா வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வினோ - பெறாமகன்
கஜந் - மகன்
நிரோஸ் - மருமகன்