Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 15 MAR 1973
மறைவு 03 APR 2026
திருமதி ரவிச்சந்திரன் சுபர்ணா
வயது 53
திருமதி ரவிச்சந்திரன் சுபர்ணா 1973 - 2026 அரியாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schwyz ஐ வசிப்பிடமாகவும், சின்னாளங்கண்டு அரியாலையை வதிவிடமாகவும் கொண்ட ரவிச்சந்திரன் சுபர்ணா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உங்களைப் பார்ப்பது இனி எக்காலம்?

காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உங்கள் கோலமுகமும்
உதட்டோரப் புன்னகையும் என்றும் மாறாது!

தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம்!

அன்பின் திருவுருவாய் எமது வழிகாட்டியாய்
எமது இதயங்களில் அணையாத சுடராய்
என்றும் இருப்பீர்கள் அம்மா! 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 09:00 மணிக்கு கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல. 9. சின்னாலன்கண்டு வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.