இலங்கையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரவி கந்தையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதமொன்று ஆனதையா மறைந்து
மனதில் உன் நினைவுகள் தானையா நிறைந்து
மரணமேன் உனைத் தொட்டதையா விரைந்து
மார்பிலுள்ள வேதனைத்தீ என்றுதான் மாறுமையா
காதோரம் ஒலித்த உன் குரல்கள்
கேட்கத் துடிக்கும் எம் செவிகள்
காணாதா என இன்றும் ஏங்கும் விழிகள்
காலனிட்டதோ எமக்கு
உனை நித்திய தூக்கத்தில் பார்த்த வலிகள்
மாதமொன்று சென்றாலும் மாறவில்லை
உனைப் பிரிந்த துயரிலிருந்து நாம் மீளவில்லை
அந்தியொட்டி நாளில் உம்
ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்திக்கின்றோம்
அன்னாரின் துயரச் செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி மூலமும் அனுதாபச் செய்தி கூறியவர்களுக்கும், எமது குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருந்து உதவிய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Ravi, I am so glad that I got to spend 2 days by your bedside after the surgery. A chance given to me by the divine. You are so close to my heart and did not for a moment think that you will leave...