1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ரவீந்திரன் பிரசன்னா
வலிகாமம் வடக்கு பிரதேசசபை ஊழியர்
வயது 29
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:20/12/2024.
யாழ். மல்லாகம் சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரவீந்திரன் பிரசன்னா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவலை!
ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா..!
உங்கள் குரலை மீண்டும் ஒருமுறை கேட்போமா?
விதி எழுதிய விதிப்புரை
புரியாமல் வாழ்ந்து விட்டோம்
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம் ..!
ஆண்டொன்று ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது- பிரசன்னா
புன்னகை புரியும் உங்கள் முகம்
தெரிகிறது தினம் தினம்! உங்கள் ஒழுக்கம்
நற்பண்பு மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
அழியாது எம் துயரம் மறையாத உங்கள் நினைவு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace ?