அமரர் ரவீந்திரன் சிவசம்பு
வயது 65
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது அம்மாவின் மூத்த சகோதரரான எனது பெரிய மாமாவின் மகன் எனக்கு மச்சான் முறையாக இருந்தாலும் அவர் என்னை பாசத்தோடு "அண்ணா" என்றுஅழைக்கும்போது நான் தம்பி என்ற முறையில் பழகிய ரவி விண்ணுலகம் சென்ற செய்தியை கைத்தொலை வீசி ஊடாக அறிந்தபோது மிகுந்த மன வேதனை அடைந்தேன். பூமியே பிளந்து அதல பாதாளத்தில் நான் விழுந்தது போல் இருந்தது. கரை காணாத துயர கடலில் மூழ்கினேன்.
கடல் கடந்து இருந்தாலும் தினமும் நாம் இருவரும் கரை காணாத, கறை படியாத அன்புடன் தான் பழகுவோம். கைத்தொலைபேசியில் உரையாடுவோம். அன்றாடம் ஊர் புதினங்கள், பத்திரிகை வானொலி செய்திகள், காலநிலை மற்றும் அண்மையில் நடைபெற்று முடிந்த திருநெல்வேலி வரசக்தி விநாயகர் ஆலய உற்சவங்கள் பற்றிய விமர்சனங்கள் எமது உரையாடல்களாக இருக்கும். விநாயகர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். இதனால் ஊரில் பல இறையருள் கொண்ட நண்பர்கள் அவருடன் இருக்கின்றார்கள். அது மாத்திரமல்ல அவர் தனது இளமைக் காலத்தில் இருந்து பல சிங்கள சகோதரர்களும் நண்பர்களாக இருக்கிறார்கள்.
அப்படியாக பலரத அன்பையும் மதிப்பையும் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வரும் வேளையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை இதய நோய் உருவில் வந்த சாவு அவரை அணைத்து கொண்டது. தனது 65 ஆவது வயதில், வாழ வேண்டிய வயதில் சாவை தழுவிக்கொண்டார்.
விதியே உனக்கு முடிவில்லையா? உன் லீலைக்கு அளவில்லையா? சாவே உனக்கு சாவு வராதா? ஏன் ரவியை வாழ வேண்டிய வயதில்அழைத்து சென்றாய்?
விநாயகருக்குரிய சங்கடஹர சதுர்த்தி அன்று அந்த வரசக்தி விநாயகரே அழைத்து சென்றாரா?
எதுவாயினும் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி.
உதயகுமார் மற்றும் அவரது குடும்பம்
(லண்டன்)
Write Tribute
We are nobody to question on God’s will. But it feels hurt that he called you so soon. May your soul rest in peace!