மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வடமராட்சி கரணவாய் மத்தி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி கிருஷ்ணபிள்ளை அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 10-05-2022
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திருந்த உத்தமியே,
எங்கள் உயிர் அம்மாவே, வானுயர் தெய்வத்துள்
ஒன்றாகி விட்டீர்கள்
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர்வாழும்
மண்விட்டு மறைந்த நீங்கள் விண்ணோக்கி சென்றாலும்
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன் நிஜங்களைத் தேடுகிறோம் அம்மா
உயர்குணமேலிய திருவுருவாய், வழிகாட்டியாய், நிலவொளியாய்
தினம் தினம் எமையெல்லாம் மனதாற்றி அகலொளியாய்
நிறைமதியாகி, குறைநிறைகள் எடுத்தியம்பி நல்வழிகாட்டிய
உம் கருணையினை பேறாக பெற்று பெருமை கொண்டோம் அம்மா
குலதெய்வங்களும், குடும்பங்களும், ஊரும், உற்றார், உறவினர்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் எல்லோருமே உங்கள்
வரவைத் தேடுகிறோம் அம்மா...
நினைவோடும் கனவோடும் நீண்ட பெருமூச்சோடும்
25 ஆண்டு காலம் நாம் வாழ்ந்த துயர் போதுமம்மா
எங்கள் வாழ்வினில் நீங்களே திசைகாட்டி
அதன் வழியே பின்பற்றி உங்கள் உணர்வுகளுடன்
எங்கள் உயிர் உள்ளவரை உங்கள் பாதம்
மலர்தூவி வணங்குகின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கும்
உங்கள் குடும்பத்தினர்..