1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரட்ணவேல் மகிபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:16/05/2024.
எங்கள் எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத தீயச்சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கும்- தெய்வமே!
கட்டிய மனைவி கண்கலங்கி நிற்க
நீங்கள் வெகு தூரம் சென்றது ஏனோ
குடும்பத்தின் ஒளி விளக்காய்
மிளிர்ந்த எம் தெய்வமே!
நாம் பெற்ற பிள்ளை
பாசத்துக்கு ஏங்கி நிற்க!
பாதியில் பிள்ளையை பிரிந்ததேனோ!
அறிவூட்டி சீராட்டி வளர்த்த அப்பாவே!
அன்பான அறிவும் பாசமும் தந்து
அரவணைத்து மகிழ்ந்தாயே
பொன்ணை வாழ்வு தனை
போற்றி வளர்த்த அப்பாவே!
உங்களோட மட்டுமல்ல
உங்கள் நினைவுகளோடும்
நாம் வாழ்ந்த நாட்களை யார் மறப்பார்!
எம்மையெல்லாம் தவிக்கவிட்டுச்
சென்று ஓராண்டு காலமாகிறதே!
உங்கள் நினைவுகளுடன் வாழும்
உங்கள் மனைவி, பிள்ளை..!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace my friend. My heartfelt condolences to Mahiban Family, Mahinthan Family and Thabo akka family.