Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 AUG 1939
இறப்பு 09 FEB 2013
அமரர் இரத்தினசிங்கம் இராசலட்சுமி
வயது 73
அமரர் இரத்தினசிங்கம் இராசலட்சுமி 1939 - 2013 தாண்டிக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

வவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், 9/5, இராசதுரை வீதி, வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் இராசலட்சுமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. 

குழந்தைப் பருவமதில்
பார்த்த உன் அழகு முகம்
இன்றும் எம் நெஞ்சில் பசுமையாய்
இருக்குதம்மா

அன்பின் திருவுருவே
அழகின் இருப்பிடமே
அமைதியின் உறைவிடமே
என்றுமே மறக்கமுடியாதம்மா

கருணையும் அன்பையும்
அணிகலனாய் கொண்டாயே
எம் வாழ்வு ஒன்றையே
உன் உயிராய் நினைத்தாயே

ஒளிதரும் சந்திரன் போல
எம்மோடு நீயிருந்தாய்
நீயில்லா இல்லமிங்கே
வெறிச்சோடி இருக்குதம்மா.

அன்பான உபசரிப்பும்
அமைதியான உன் பேச்சும்
அத்தனை உறவையும்
நேசிக்க வைத்ததம்மா

ஆண்டு பத்து முடிந்ததம்மா
அம்மா உன் முகம் பார்த்து
மீண்டும் ஒரு பிறப்புளதேல்
எங்கள் அம்மாவாய் வந்து விடு

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute