யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட இரட்ணசிங்கம் நேசராஜா அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரட்ணசிங்கம், கிரேஸ் திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வரதலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபைராஜா, தயாளராஜா, காலஞ்சென்ற இன்பராஜா, கருணாராஜா, வசந்தராணி, ரஞ்சிதராணி, சுகிர்தராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரொசான், காலஞ்சென்றவர்களான குமுதன், கிருபாகரன் மற்றும் தேவமனோகரன், கருணாகரன், பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தாட்சாயினி, றஞ்சினி, விஜயகலா, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரெயினா, பென்சன், தர்சா, தர்சிகா, சுரேனிகா, ரொபின், ரொபிகா, பிரவினா, விஸ்னு ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று 6ம் வட்டரம், சாம்பல்தீவு, திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.