Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 FEB 1971
இறப்பு 04 JUN 2019
அமரர் இரட்ணமாலா பவளகாந்தன்
வயது 48
அமரர் இரட்ணமாலா பவளகாந்தன் 1971 - 2019 வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணமாலா பவளகாந்தன் அவர்கள் 04-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமநாதன், இரட்ணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பவளகாந்தன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கரிஸ், கம்ஷா,கபினாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரட்ணகலா, இரட்ணரூபி, இரட்ணஜெயந்தி, இரட்ணஜோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பகிரதன், ஜெயச்சந்திரன், சுரேஷ், ராம் பிரஜீவன், காலஞ்சென்றவர்களான செல்வநாதன், செல்வராசா, சற்குணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அன்னராணி, இந்திராணி, காலஞ்சென்ற புஸ்பராணி, இன்பராணி, பவளராணி, வனிதா, பூமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்