மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு, கனடா Mississauga, யாழ். பண்டத்தரிப்பு அம்மன் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் இரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 22-10-2022 சனிக்கிழைமை அன்று காலை 08.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் அன்னாரது இல்லத்தில் 24-10-2022 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
அம்மன் வீதி,
பண்டத்தரிப்பு,
யாழ்ப்பாணம்.