இரத்தினம் பரமேஸ்வரி:-
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டு ஓன்று கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....
என்ன செய்வது எங்கள் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க
உங்கள் முகம் காண..... "
மண்ணிலே வீழ்ந்த மழை மீண்டும்
விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள் மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ?
எம்கண்ணிலே வழியும் நீரை உங்கள்
கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம் அம்மா..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
இரத்தினம் சச்சிதானந்தம்(இறப்பு -28 Jan, 2022):-
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் சச்சிதானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எங்களுடன் பிறந்தவனே
எங்கள் அருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததடா...
தினமும் உன்னை நினைக்கும்போது
நெஞ்சம் வலிக்குதடா..
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எங்கள் சகோதரனே...!
உடல் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எங்கள் உடன்பிறப்பே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உன் நினைவுகளுடன் நாம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!