10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இரத்தினம் பாலகிருஷ்ணன்
(செல்வம்)
வயது 55

அமரர் இரத்தினம் பாலகிருஷ்ணன்
1960 -
2015
அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் பாலகிருஷ்ணன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல உருண்டோடி விட்டாலும்
எம் இதயங்கள் இருண்டுதான் இருக்கின்றது
அப்பா எங்களுக்குத் துணையாய்
எங்களைத் தாங்கும் தூணாய்
எங்களோடு நடைப்பயணம் நடத்துவீர்கள்
என்று நாம் எல்லாம் நம்பியே இருந்தோம்!
ஆனால் எந்தவித சலனமும் காட்டாமல்
சாவுக்கு சம்மதப்பட்டதேன் அப்பா
அப்பா உங்கள் பாசம்
உருகாத நெஞ்சங்களையும் உருக வைக்கும்
சொரியாத கண்களையும் கண்ணீர் சொரிய வைக்கும்!
நீங்கள் எங்களை விட்டு
தெரியாத இடம் தேடி பறந்ததேனப்பா?
கண்ணை மூடி நாங்கள் தூங்க
கனவில் உங்கள் முகம் தெரிகிறதே
பாசம் காட்டும் உங்கள் முகத்தை
நாம் யாரிடமும் இன்னும் அறியலையே...
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும் உங்கள் குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்