யாழ். வல்வெட்டித்துறைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு 3ம் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினவேலாயுதம் தனலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஆழாத்துயரில் எமையாக்கி
ஆழ்துயில் நீங்கள் கொண்டு
முப்பத்தொரு நாட்கள் ஆகினாலும்,
முப்பொழுதும் இன்றும்
எங்கள் நினைவில் நீங்கள்
அனைவரையும் கவரும் தன்மை
குறையாத புன்சிரிப்பு
கோபமறியா வதனம்
கலகலவென்ற பேச்சு
தணியாத தன்னபிக்கை
இவையெல்லாம் நாமினி
எங்கு காண்போமோ?
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 25.11.2021 வியாழக்கிழமை அன்று அதிகாலை
யாழ்.கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து அன்னாரின்
இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து
நடைபெறவிருக்கும் மதிய போசன நிகழ்விலும் கலந்து அன்னாரின் ஆத்ம சாந்திக்காக
எம்முடன் இணைந்து பிரார்த்திக்க அன்புடன் அழைக்கின்றோம்.
எங்களுடைய அம்மாவின் உயிர்நீத்த செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.