யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரெத்தினவடிவேல் சோதிப்பரமானந்தர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
இறைவனின் படைப்பில் பிறப்பும் இறப்பும்
இயல்பான விதியென்பதை நாம் உணர்ந்திட்ட போதும்,
அனைவரிடத்திலும் இன்முகம் காட்டி
அன்பும் அரவணைப்பும் கூட்டி
பிள்ளைகளை கல்வியில் மேம்பட வைத்து
வாழ்கைப் பெருங்கடலில் எமக்கு
வளமான வாழ்கை அமைத்துத் தந்த அப்பாவே....
ஆறாத் துயரில் எமை ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டு இன்று,
ஆண்டு ஒன்று ஆனபோதும்
அனுதினமும் நீங்கள் அசைந்து திரிந்த
இடமெங்கும் உங்கள் திருமுகம் தோன்றுதிங்கே
மாண்டோர் மீண்டும் வருவாரோ மானிடத்தில்
எனும் வாக்குப் பொய்குமானால் மகிழ்வோம் நாம்.
அன்பை நிறைத்து அரவணைத்து
முத்தம் சொரிந்த பேரப்பிள்ளைகள், தாத்தா தாத்தா என்று
தினமும் புலம்பும் புலம்பல்கள் கேட்கிறதா.
ஆண்டுகள் பலவானாலும் என்றென்றும்
எங்கள் இதயக்கூட்டில் உங்கள்
நினைவுகளைச் சுமந்திருக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
பூட்டப்பிள்ளைகள்...
Dear Family members, Kindly accept my condolences! His life/was well achieved life! May him rest in peace!!!