

யாழ். பண்ணாகம் சுளிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் பரமேஸ்வரன் அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயசிறி, காலஞ்சென்ற ஜெயகணேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருச்செல்வம் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கலாபூசணம், கலைவாரிதி கிருஷ்ணதுரை, சிவகங்கை, மதியாபரணம், கோகுலராஜா(ராசு- பிரான்ஸ்), சந்திரா, கலாமணி(மலர்- நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வானைப்பிள்ளை, சிவன்யோகம், காலஞ்சென்ற சிவநாயகம், சற்குணேஸ்வரி(பிரான்ஸ்), புவனேந்திரன், சிறீஸ்கந்தராஜா(நோர்வே), காலஞ்சென்றவர்களான மங்கயர்க்கரசி, சிவஇன்பநாயகி மற்றும் சச்சிதானந்தம், பரமானந்தம், சறோஜாதேவி, விவேகானந்தன், ஆனந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபர்ணா, வித்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுளிபுரம் திருவடிநிலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.