15ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு பெரியபுலம் 5ம் வட்டாரம் இறுபிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினராசா ராசம்மா அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா 15 ஆண்டுகள்
கரைந்ததம்மா உன் அன்பு முகம்
என் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
நீங்கள் என்னை விட்டு
அகலவில்லையம்மா!
என்னோடு தான் வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீயம்மா!
அன்று என் அழுகையின்
அர்த்தம் புரிந்த அகராதி
புத்தகம் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு
தவிக்கின்றேன் கேட்கவில்லையாம்மா!
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் உன்னை போன்று அன்பு
செய்ய யாரும் இல்லையம்மா இவ் உலகில்...
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
ஹரிகரன்(மகன்)