

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் விசுவலிங்கம் அவர்கள் 30-12-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தர் வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற தம்பையா விசுவலிங்கம்(திசமகாராம- பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலராணி, காலஞ்சென்ற தேவராணி, செல்வராணி, சுகிர்தரஞ்சினி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், சீவரத்தினம் மற்றும் செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நவரத்தினம், ஸ்ரீகாந்தரங்கநாதன், பத்மநாதன், கலாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாமினி, சொரூபினி, தர்ஷினி, பிரசாந்த், சசிகரன், ஷாமினி, கிரிஷாந்த், தினேஸ், அனுஷ்கா, அர்ச்சனா, அருனிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கவின், இலக்கியா, ஷருஷேந் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2020 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.