யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Jempetta Lane ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் விஜயலெட்சுமி அவர்கள் 05-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் ஸ்ரீரங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
தமிழரசி, ஸ்ரீமகள், சாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குசலகுமார், ஜெயசந்திரன், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவயுதன், நிஷானி, சஸ்மிதா, அஸ்மிகா, அஸ்வின், பிரிஷா, நிதுஷா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான இராஜலச்சுமி, பரமானந்தன், சபாரத்தினம், சண்முகநாதன், நாகலெட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், குணமணி, நாகம்மா, செல்லம்மா, குணமாலை, சிவக்கொழுந்து, பொண்ணுத்துரை, சின்னத்துரை, செல்லத்துரை, தர்மலிங்கம், லெட்சுமி, சிவபாக்கியம், பாக்கியம் மற்றும் நல்லதங்கம், சீதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-11-2025 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details