Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 NOV 1935
இறப்பு 12 JUN 2020
அமரர் இரத்தினம் சீவரத்தினம்
வயது 84
அமரர் இரத்தினம் சீவரத்தினம் 1935 - 2020 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி இராசவீதி, லண்டன் Manor Park ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சீவரத்தினம் அவர்கள் 12-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகமணி சீவரத்தினம்  அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வகுமார்(லண்டன்), கஜேந்திரகுமார்(லண்டன்), முரளிதரகுமார்(லண்டன்), நரேந்திரகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திரலேகா, றஜனி, இந்திராதேவி, சந்திரவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, தங்கரத்தினம், பாலசிங்கம், நாகரத்தினம், செல்வரத்தினம், இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சங்கீர்த், பிரஷன்னா, மதனிஷா, சுபனிஷா, யாகுலன், மிதுர்ஸ ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices