31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 12 DEC 1934
இறப்பு 06 APR 2021
திருமதி இரத்தினம் அன்னலட்சுமி
வயது 86
திருமதி இரத்தினம் அன்னலட்சுமி 1934 - 2021 அரியாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் அன்னலட்சுமி அவர்களின் நன்றி நவிலல்.

அன்பான அம்மா,

எம்மைவிட்டு எங்கு சென்றீர்கள், வருடம் பல ஆனாலும்
ஆறாது எம் துயரம், எண்ணாத நாள் இல்லை,
இதயத்தில் எப்போதும் அம்மா உங்களுடைய நினைவுகளே
எம்மோடு இன்னும் பல வருடங்கள் இருக்க முடியவில்லை
எம்மை நடுவில் தவிக்கவிட்டு சென்று விட்டீர்களே அம்மா
எங்களை அப்பா இன்றி வேறு யார் துணையும் இன்றி
தனியாக எம்மை நல்லபடியாக வளர்திர்கள் உங்களை
போல் வேறு எவராலும் எங்களை இப்படி வளர்த்திருக்க
முடியாது எங்களை மட்டும் இல்லாமல் உங்களது
பேர பிள்ளைகளையும் நன்றாக வளர்த்து
என்னிடம் ஒப்படைத்து விட்டீர்கள் இதற்கு நன்றி சொல்ல
வார்த்தைகள் இல்லை அம்மா கடைசி நிமிடம் உங்கள்
குரலை கேட்க முடியாமல் போய்விட்டதே அம்மா நினைவுகளில்
தவிக்கும் நெஞ்சங்கள் இங்கிருக்க கனவாக போய்விட்டீர்களே
ஊருகுலைந்த குருவிகளாய் நாங்கள் தவிக்கிறோம் உங்கள்
அன்பு முகம் எமக்கு இனி காண முடியாதென்று அம்மா
சொல்லி அழ வார்தை இல்லை அம்மா பார்க்கும் இடம் எல்லாம்
உங்கள் நினைவுகள்

அன்பு மகள் - இந்துமதி

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 04-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெற்று வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் எதிர்வரும் 06-05-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப்பிரார்த்தனையிலும் அத்னைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute