திதி:29/01/2026
யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் அழகரத்தினம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து
ஆண்டுகள் எட்டு ஓடி மறைந்ததம்மா...
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்!
நிலவை சூரியனை
ஒளிர்கின்ற தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது
கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை விட்டு கலையாது!
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் 8 கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அன்பு முகம்....
உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண.....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!