3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ராதாகிருஷ்ணன் சின்னையா
(தாஸ்)
வயது 41
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் சின்னையா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று ஆனாலும் ஆறவில்லை
எங்கள் சோகம் அப்பா!
உங்களை இழந்து தவிக்கும் நாள் முதல்
என் விழிகளில் வழியும்
கண்ணீர்த்துளிகளின் வேதனைகள்
உங்களிற்கு புரிகின்றதா அப்பா!
ஐந்து வருடங்கள் போனாலும்
மெளனமாக எனக்குள்ளே
என் மனசு அழுவதை நீங்கள் உணர்வீர்கள்
உணர்ந்து கொண்டேயிருப்பீர்கள் அப்பா!
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
எங்கள் அருகில் நீங்கள் இருப்பதை
நாங்கள் உணருகின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலி