அம்பாறை தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசையா தேவராஜா அவர்களின் நன்றி நவிலல்.
எமது குடும்பத்தின் குலவிளக்கு அணைந்து இறைபதம் சேர்ந்த செய்திகேட்டு எமது இல்லம் வந்து துயரத்தில் பங்கு கொண்டதோடு வேண்டிய உதவி ஒத்தாசைகள் நல்கி கண்ணீர் அஞ்சலி செலுத்தி பதாதைகள் வெளியிட்டோருக்கும் ஆறுதல் செய்திகளைத் தெரிவித்தவர்களுக்கும், வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி மூலம் ஆறுதல் வழங்கி யோர்களுக்கும் மற்றும் இரவுபகல் பாராது உணவு வகைகளைத் தந்து எமது துக்கத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் ஏனைய கருமங்களில் பங்குகொண்டு அயராது உழைத்த அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அமரர் இராசையா தேவராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் தாங்களும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்பதுடன் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
வில்லியம்பிள்ளை வீதி,
தம்பிலுவில் - 01.
Sivakanthan and Family- Please accept our deepest sympathies. Mehan Family - Australia