யாழ். திருநெல்வேலி முடமாவடியைப் பிறப்பிடமாகவும், யாழ். குரும்பசிட்டி, இந்தியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா சுந்தரலிங்கம் அவர்கள் 20-04-2021 செவ்வாய்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, நல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(வர்த்தகர்) நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மனோராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
மதன்(லண்டன்), சுதன்(கனடா), யுகன்(கனடா), காலஞ்சென்றவர்களான கணன்(கப்டன் வீரசோளன்), மதுரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம்(ஓய்வு பெற்ற பொறியியலாளர்), காலஞ்சென்ற பொற்கொடி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாலதி(லண்டன்), புஸ்பா(கனடா), மஞ்சுளா(கனடா) , புலேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மனுஜன், கரிகரன், மிதிரன், பிறிஷா, றித்திக், கனிஷா, கேசிகா, அட்விக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 28 Apr 2021 1:00 PM - 2:00 PM
- Wednesday, 28 Apr 2021 2:00 PM - 3:00 PM
- Wednesday, 28 Apr 2021 3:30 PM - 4:00 PM