
யாழ். ஈவினையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா செல்லம்மா அவர்கள் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தங்கப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புத்திரியும்,
காலஞ்சென்ற கந்தை இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராணி, இந்திராஜா, இந்துமதி, ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மாணிக்கதியாக நாதன், சாமுண்டேஸ்வரி ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜந்தா, சசிகரன், நிராகுலன், கோகுலன், சஞ்ஜீவன், ரஜீவன், கல்யாணி, கஜலினி, சதீசன், சுஜானி, சுவர்ணா, கோசலா, ராதை, அனுஷானந்த், உபேந்திரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஷாய்ஷாந்த், ஹாசினி, சஷ்வினி, கவினஷா, ஆருஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஈவினை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.