யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா புவனராணி அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகி, உமையாள், நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பார்த்திபன், வேணுகோபால், குமுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மகேந்திரன், தெய்வேந்திரன், புவனேந்திரன், காலஞ்சென்ற விமலேந்திரன், புஷ்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, பொன்னுத்துரை மற்றும் பவளம்மா, காலஞ்சென்ற தர்மரத்தினம், நாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வைஷ்ணவி, ஜானவி, கிர்சாந், கீதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in Peace. Our condolences to you and your family.