யாழ். நீராவியடி பிறவுன் றோட்டைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கிளிநொச்சி திருவையாறு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராசையா மகேந்திரன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அமரர் இராசையா மகேந்திரன் பாசெல் மாநிலத்தின் மூத்த தமிழர்களில் ஒருவரும் தமிழீழ விடுதலையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அளப்பரிய பற்றுக் கொண்டவரும், சமூகச் செயற்பாடுகள் அனைத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி மக்களுக்காக பெரும் பணி ஆற்றியவரும், இந்து ஆலயத்தின் முதன்மை நிர்வாகியும், பாசெல் இந்து ஆலயத்தை இரவு பகலாக உழைத்து உருவாக்கியவரும் இறை பணியில் இறுதிக்காலம் வரை தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டவரும் தனது பணி தமிழ் மக்களுக்கே என செயற்பட்ட எமது பெரு மதிப்புக்குரிய இராசையா மகேந்திரன் (றீகன் மகேந்திரம் அண்ணன்) அவர்களின் இழப்பு எமக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து துயரடைந்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கு மன அமைதியும் மன வலிமையும் பெற இறைவனை வேண்டி, அவர்களுடைய துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம். அன்னாருடைய ஆன்மா இறைபாதங்களை அடைய நாமும் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!