ஆருயிர் மன்னவனே அன்பு நிறை அப்பாவே,நேசமிகு மாமாவே,பாசமிகு தாத்தாவே,
இறுதி மூச்சடங்கும் நாள் வரையும்
எம்மிதயம் ஒரு போதும் உமை மறவாதே!
ஆராரோ பாடி எங்களை அருகிருந்து உறக்கிய நீங்கள்
யாருக்கும் சொல்லாமல் அமைதியாக சென்றதேனோ?
யார் யாரோ வந்தெமக்கு ஆறுதல் தான் சொன்னாலும்
அரவனைக்கும் நீங்களின்றி ஆறுதல் எமக்கில்லையே!
வெளிநாடு சென்று வர எமை வழியனுப்பி வைத்த நீங்கள்
வரமுடியா நாடு நோக்கி யாத்திரை தான் சென்றதேனோ?
உம் இறுதி யாத்திரைக்கு வரமுடியாத
பாவிகளானோம் அப்பா
நாங்கள் இறக்கும் நாள் வரைக்கும் இத்துயரம் மாறாதப்பா!