

யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை புஸ்பராஜா அவர்கள் 01-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராசதுரை குண்டுமணி தம்பதிகளின் மூத்த புதல்வரும், தம்பையா பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தில்லைநாயகி(ரஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
மாதவன்(லண்டன்), காலஞ்சென்ற தமிழினி மற்றும் ரகுநந்தன்(கனடா), புருஷோத்தமன்(லண்டன்), சுதாகினி(பிரதேச செயலகம்- கரவெட்டி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கஸ்தூரி(லண்டன்), உமாசந்திரன்(நோர்வே), மொறின் சர்மினா(கனடா), கெளரி(லண்டன்), பிறேமதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜனனன், மாதுர்சன், மதீசன், பிருந்தன், பிரியந்தன், தமிழிந்தன், ஆர்த்திகா, ரோஷினி, தீபிகா, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மகேஸ்வரி, காலஞ்சென்ற அழகேஸ்வரி மற்றும் சந்திரராஜா, சிவராஜா, இந்திரராஜா(கக்கன்), யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தங்கராசா, செல்லத்தம்பி, வசந்தமலர், சற்குணதாஸ், வான்மதி மற்றும் ஜெயராணி ஆகியோரின் மைத்துனரும்,
இலங்காதேவி, காலஞ்சென்றவர்களான விமலாதேவி, மஞ்சுளாதேவி மற்றும் சுசீலாதேவி, ருக்மணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2020 வெள்ளிக்கிழமை அன்று ஆலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பெரியப்பா ???? போண்டா என்று ஒருக்கா கூப்பிடுங்கோ ?????