அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 30 JAN 1941
இறப்பு 15 JUL 2022
திரு இராசதுரை கணேசராஜா
ஆசிரியர்- பெனிலன் தோட்டப் பாடசாலை, பட்டித்தலாவ-தொளஸ்பாகை, பூண்டுலோயா மகாவித்தியாலயம், இணுவில் மத்திய கல்லூரி, ஏழாலை மகா வித்தியாலயம், ஏழாலை தெ/சைவ சன்மார்க்க வித்தியாசாலை, ஏழாலை வடக்கு அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, அதிபர்- கோட்டைக்காடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலை
வயது 81
திரு இராசதுரை கணேசராஜா 1941 - 2022 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை கணேசராஜா அவர்களின் வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

எமது குடும்பத்தின் பாசத்தலைவனாய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே
எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து
அன்பையும் அரவணைப்பையும் தந்து
எங்களைத் தவிக்கவிட்டு அமைதியாய்
விண்ணுலகு சென்றீர்களே

உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வு 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்றிருந்த வேளையில் நேரில் வந்து ஆவன செய்தும், ஆறுதல் கூறியும், தொலைபேசி மூலமும் முகநூல், whatsapp, viber, RIPBOOK ஆகியவை மூலமாகவும் அவரை பற்றி எழுதியும், கதைத்தும், அவர் விட்டு சென்ற அளப்பெரும் பணிகள் பற்றியும், ஒப்புவமையற்ற ஆசிரிய சேவைகளையும் நீங்காத நினைவுகளோடு எம்மோடு பகிர்ந்து கொண்ட அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இருகரம் கூப்பி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.