

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Arnsberg யை வதிவிடமாகவும் கொண்ட இராசாத்திஅம்மா பாலசுப்பிரமணியம் அவர்கள் 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை சிவஞானம் தம்பதிகளின் அன்பு மகளும், கதிரவேலு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசுப்பிரமணியம்(மணியம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஷர்மிலா அவர்களின் அன்புத் தாயாரும்,
தர்மிலன் அவர்களின் அன்பு மாமியாரும்,
ஆறுமுகசாமி(கனடா), காலஞ்சென்ற செல்வநாயகம்(செல்வம்), ஞானகிருஸ்ணசாமி(தவம்- இலங்கை), பூமாதேவி(ஆச்சி- கனடா), இராசலிங்கம்(கிச்சி- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவமணி(கனடா), சறோயாதேவி(இலங்கை), ராதாதேவி(இலங்கை), ஆறுமுகநாதன்(கனடா), சுதர்சினி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம்மா, இராசரத்தினம், நல்லம்மா மற்றும் பரமேஸ்வரி, பூலோகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற தில்லைநாதன் மற்றும் வள்ளியம்மை, காலஞ்சென்ற பூலோகம், முருகையா மற்றும் செல்வராணி ஆகியோரின் அன்புச் சகலியும்,
ஜெயக்குமாரன், றஜனி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.