Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 28 APR 1946
மறைவு 16 DEC 2022
அமரர் இராசசிங்கம் குலசிங்கம்
ஓய்வுபெற்ற அதிபர்- யா / ஊரெழு கணேச வித்தியாலயம். பொருளாளர்- கோண்டாவில் கிழக்கு, ஆசிமட அரசடி விநாயகர் ஆலயம்
வயது 76
அமரர் இராசசிங்கம் குலசிங்கம் 1946 - 2022 யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசசிங்கம் குலசிங்கம் அவர்கள் 16-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசசிங்கம், மதியாபரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகரத்தினம், தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யா/ கோண்டாவில் சி.சி.த.க.பா) அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன்(ஐக்கிய அமெரிக்கா), பிரணாளினி(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்- கல்வி அமைச்சு, வடக்கு மாகாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யாழினி(ஐக்கிய அமெரிக்கா), குமாரசூரியர்(மணிவண்ணன்- முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தித் திணைக்களம், வடக்கு மாகாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுபனிதா, ஸ்ரீயா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற குமாரசிங்கம் மற்றும் தனரஞ்சிதமணி, மனோரஞ்சிதமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
“இரஞ்சிதவாசா”
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில், யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு:-
செந்தூரன் - மகன்
Mobile : +94773425145
குமாரசூரியர்(மணிவண்ணன்) - மருமகன்
Mobile : +94776528814

தகவல்: குடும்பத்தினர்