10ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 31 JAN 1964
விண்ணில் 28 JUN 2012
அமரர் இராசரத்தினம் முருகதாஸ்
வயது 48
அமரர் இராசரத்தினம் முருகதாஸ் 1964 - 2012 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவில் மேற்கு கே.கே.எஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும், லண்டன் லூசியத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் முருகதாஸ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அள்ளக்குறையா அன்புடனே
தாய் தந்தைக்கு நிகராக
 எமக்கு அனைத்தையும் அளித்த
 அருளோனே...

எமை பிரிதலில் ஏனிந்த
 வேகம் கொண்டீர்கள்...!
மீளாத்துயரில் எமையாழ்த்தி
இளைப்பாறி சென்றீர்கள்.

எம்மோடு நீர்களித்த
நாட்பொழுது ஒவ்வொன்றும்
 நீங்காமல் இருக்குமே
 உமை ஞாபகமாய் சுமக்குமே

பாலகனான என்னை
ஏன்தானோ பிரிந்தீர்கள்
இனி தோளேற்றி தேர்காட்ட
 யாரெனக்கு இருக்கிறார்...!

நாம் தளம்பிய போதெல்லம்
 தேற்றுவதற்கு நீர் இருந்தீர்
 இன்று விழி ததும்பி நிற்கிறோம்
 எமை ஆற்றுவதற்காய் மீள் எழீரோ...!

தகவல்: குடும்பத்தினர்